மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
நீடாமங்கலம் அருகே புதன்கிழமை வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
நீடாமங்கலம் அருகே புதன்கிழமை வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி ஊராட்சி மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பானுமதி (55). இவர், அப்பகுதியில் உள்ள வயலில் களையெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அறுந்து கிடந்த மின் வயரை கவனிக்காமல், மிதித்து விட்டார். இதனால், அவர் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நீடாமங்கலம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, பானுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.