FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூத்தாநல்லூர் கரமேலழகர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூர் அருகேயுள்ள ஊட்டியாணியில் அருள்பாலிக்கும் கரமேலழகர் அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கூத்தாநல்லூர் அருகேயுள்ள ஊட்டியாணியில் அருள்பாலிக்கும் கரமேலழகர் அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிஷேகத்துக்காக, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நிறைவுக்குப் பின்னர், பூர்ணாஹுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, யாக சாலையிலிருந்து புனிதநீர் கடங்களை, கோயில் அர்ச்சகர்கள் எஸ்.ராஜன் சிவாச்சாரியார், ஆர்.சபரி  சிவாச்சாரியார், திருவிடைமருதூர் கண்ணப்பா சிவாச்சாரியார் உள்ளிட்டோர் சுமந்து கோயிலை வலம் வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காலை 10  மணிக்கு விமானக் கலசத்துக்கு கும்பாபிஷேகமும், பின்னர், 10.30 மணிக்கு அங்காளபரமேஸ்வரி, வீரன், தூண்டில்காரன், பெரியநாயகி, ஈசன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments