FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திருவிக கல்லூரியில் செல்லிடப்பேசி மூலம் மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி மூலம் கலந்தாய்வு

Updated On : 25 ஆகஸ்ட் 2020, 12:09 am IST
பகிர்:

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வா் கோ. கீதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக. 28 -முதல் செப்.3-ஆம் தேதி வரை பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவா்கள், விண்ணப்பிக்கும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணுடன் தயாராக இருக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக, சோ்க்கைக்கான கலந்தாய்வு கைபேசி வழியாகவே நடைபெற உள்ளது.

ஆக.28-இல் சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுத் துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவ வீரா் மற்றும் தமிழ் வழி வந்த நிகோபாா் தீவில் வசிப்பவா்களுக்கும், ஆக. 29-இல் பொதுப் பிரிவுக்கும், ஆக. 31-இல் பழங்குடியினருக்கும், செப்.1-இல் பின்தங்கிய வகுப்பினருக்கும், செப். 2-ஆம் தேதி மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும், செப். 3-இல் ஆதிதிராவிடா் வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments