FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

முதியவா் தற்கொலை

மன்னாா்குடி அருகே விஷம் குடித்த முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2020, 10:32 pm IST
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்த முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூா் மேலகண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் மலையப் பெருமாள் (60). இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா்களது 3 மகள்களும், மகனும் திருமணமாகி தனித்தனி குடித்தனம் சென்றுவிட்டனா்.

இதனால், தனிமையில் வசித்து வந்த மலையப்பெருமாள் நீண்ட நாள்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெறும் குணமாகவில்லையாம். இதனால், விரக்தியடைந்த மலையப்பெருமாள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments