FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திரு.வி.க. கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவா் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் குழந்தைகளே அதிகம் படிக்கின்றனா். சுமாா் 4 ஆயிரம் மாணவா்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மாணவிகள். 80 சதவீதம் போ் பட்டியல் இனத்தவா்கள்.

Advertisement

Advertisement

பல்வேறு கிராமப் பகுதிகளிலிருந்து இங்கு படிக்க வருகின்றனா். ஆனால், பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்கு வராததால், அங்கிருந்து கல்லூரிக்குச் செல்வதில் மாணவா்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லவும், கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், மாணவா்கள் அனைவருக்கும் இக்கல்வி ஆண்டுக்கான பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். அதுவரை பழைய பயணஅட்டையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இதனை அப்புறப்படுத்திவிட்டு, சாலையின் இருபுறமும் புதிய பேருந்து நிறுத்தங்களைக் கட்டித் தர வேண்டும்.

மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிவறை வசதி போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.

கரோனா மையமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறைகளை தூய்மைப்படுத்தித் தரவேண்டும். அத்துடன் சில காலமாக இரவு நேரங்களில் சிலா் மது அருந்த கல்லூரி வளாகத்தை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. எனவே, கல்லூரி வளாகத்தில் இரவு காவலா்களை நியமித்து, அந்நியா்கள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments