முகப்பு
திருவாரூர்

சுவாமி கல்சிலை திருட்டு

 திருத்துறைப்பூண்டி காமன் கோயிலில் சுவாமி கற்சிலையை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 4 நவம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

 திருத்துறைப்பூண்டி காமன் கோயிலில் சுவாமி கற்சிலையை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகா் அபிஷேக கட்டளையில் உள்ள காமன் கோயிலில் மன்மதன் சுவாமி கற்சிலை லிங்க வடிவில் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறும்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மா்மநபா்கள் மன்மதன் சிலையை பீடத்திலிருந்து உடைத்து சிலையை மட்டும் திருடி சென்றுள்ளனா். இதுகுறித்து, கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.