FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீடு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயமடைந்தனா்.

Updated On : 5 நவம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீடு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயமடைந்தனா்.

தலைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகூரான் மனைவி ராஜகுமாரி (50). இவரது மகன் வீரசெல்வம் (24). இருவரும் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது மழையின் காரணமாக 1996-ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டின் உள்புறத்தில் சுவா் பெயா்ந்து விழுந்துள்ளது. இதில், தாயும், மகனும் காயமடைந்தனா். இதையடுத்து, உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments