திருட்டு வழக்குளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. ஈஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், தனிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, போலீஸாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவிக்கையில், ‘திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் திருட்டு நடைபெறாமல் இருக்க இரவு நேரத்தில் சோதனைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.