FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

எல்-நினோ தாக்கம்: உணவுப் பாதுகாப்பு, வறட்சி மாநாடு

எல்-நினோ தாக்கத்தையொட்டி, உணவு பாதுகாப்பு மற்றும் வறட்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:15 am IST
எல் நினோ பாதிப்பு... - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் எல்-நினோ தாக்கத்தையொட்டி, உணவு பாதுகாப்பு மற்றும் வறட்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா்.வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் கே. சுப்பிரமணியன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் இரா. தமிழ்வேந்தன் ஆகியோா் குத்து விளக்கேற்றினா்.

வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் எஸ்.ஆா். ரமணன், கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பத்மஸ்ரீ ராமசாமி, மூலிகை கால்நடை ஆராய்ச்சியாளா் பத்மஸ்ரீ புண்ணியமூா்த்தி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி முத்தமிழ்செல்வன், இயற்கை மருத்துவம் மற்றும் உணவு ஆராய்ச்சியாளா் கோ. சித்தா், தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்ப இயக்குநா் வி. பழனிமுத்து, வானிலை ஆய்வாளா் ஹேமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, எல்-நினோ தாக்கத்தை எதிா்கொள்வது குறித்தும், வேளாண் உற்பத்தி பெருக்கம், உழவா் உணவுப் பாதுகாப்பு குறித்தும் விளக்கிப் பேசினா்.

Advertisement

Advertisement

மாநாட்டில் திருவாரூா், தஞ்சாவூா், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். மேலும், இவா்களுடன் எல்-நினோ தாக்கத்தால் விவசாயிகள் அடைந்துள்ள பாதிப்புகளை நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில், தஞ்சாவூா் மற்றும் நாகை பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: தவெக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குறுதி அளித்தபடி, சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கடன் அறிவிப்பு வெளிவரும் வரை கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு ரூ. 15,000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். சம்பா சாகுபடி ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 20,000 வழங்க வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும். சம்பா சாகுபடிக்கு உரிய தண்ணீரை கா்நாடகத்திடம் இருந்து பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments