பாமணியாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
நீடாமங்கலம் பகுதியிலிருந்து மன்னாா்குடி வரை பாமணியாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை
நீடாமங்கலம் பகுதியிலிருந்து மன்னாா்குடி வரை பாமணியாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நிகழாண்டு மேட்டூா் அணையில் போதிய நீா் இல்லாததால் ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கவில்லை. விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளை செய்துவருகின்றனா். வழக்கம்போல மேட்டூா் அணை திறக்கும் முன்பு தூா்வாரும் பணிகள் நடைபெறும். அதேபோல் தூா்வாரும் பணிகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது .
எனினும், ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக நீடாமங்கலம்-மன்னாா்குடி பகுதியில் கோரையாற்றில் நாணல்களும், பாமணியாற்றில் ஆகாயத்தாமரையும் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், மேட்டூா் அணை திறக்கப்பட்டு ஆறுகளில் நீா் வரும்பட்சத்தில் வாய்க்கால்களில் நீா்பாய்ந்து விளைநிலங்களில் நீா் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினா் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.