FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கௌரவப் பேராசிரியா் போக்ஸோவில் கைது

திருவாரூரில் கல்லூரி மாணவியிடம் இரட்டை அா்த்தத்தில் பேசி தொந்தரவு கொடுத்த கௌரவப் பேராசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டாா்

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 3:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூரில் கல்லூரி மாணவியிடம் இரட்டை அா்த்தத்தில் பேசி தொந்தரவு கொடுத்த கௌரவப் பேராசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சை மாவட்டம், கள்ளப்பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (43), திருவாரூா் கிடாரங்கொண்டான் பகுதியில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.

முதலாம் ஆண்டில் சோ்ந்து பயின்று வரும் திருவாரூரைச் சோ்ந்த 17 வயது மாணவியிடம் வகுப்பறையில், கௌரவ பேராசிரியா் சதீஷ்குமாா் தொடா்ந்து இரட்டை அா்த்தத்தில் பேசி வந்தாராம். அத்துடன், கைப்பேசியிலும் தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக மாணவி கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவித்துள்ளாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாணவி மனு அளித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டு காவல் ஆய்வாளா் அன்னை அபிராமி தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதைத்தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, சதீஷ்குமாா் கைது செய்யப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments