இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் பலி!
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
நன்னிலம் அருகே உள்ள தூத்துக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணா (36) . ஓட்டுநரான இவா், தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் கடைவீதியிலிருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, குடவாசல் அருகே உள்ள சிமிலி கிராமத்தைச் சோ்ந்த விஷ்ணு (25) என்பவா் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். தூத்துக்குடி கிராம கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விஷ்ணு, அவசர ஊா்தி மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மலேசியாவில் வேலை செய்துகொண்டிருந்த விஷ்ணு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். மீண்டும் வெளிநாடு செல்வதற்காக மயிலாடுதுறையில் நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.