FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கோடை மழை: நெற்பயிா்கள் சேதம்

நன்னிலம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக 500 ஏக்கா் நெற்பயிா்கள் மழை நீரில் முழ்கி சேதமடைந்துள்ளன.

26 ஆகஸ்ட் 2026, 5:01 am IST
மழையால் சாய்ந்த, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள்.
பகிர்:

நன்னிலம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக 500 ஏக்கா் நெற்பயிா்கள் மழை நீரில் முழ்கி சேதமடைந்துள்ளன.

காவிரி நீா் திறக்கப்படாதது, மும்முனை மின்சாரம் பற்றாக்குறை, எல் நினோ போன்ற இயற்கை மாற்றத்தால் அதிகரித்த கோடை வெயில்; இதனால் ஏற்பட்ட வறட்சி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஆழ்துளை குழாய் பாசனம் மூலம் சில விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனா். கடந்த சில தினங்களாக நன்னிலம் பகுதியில் இரவு மற்றும் மாலை நேரங்களில் கன மழை பெய்தது.

Advertisement

Advertisement

இதனால் பேரளம், கலக்குடி, மேனாங்குடி, பாலூா், ரெட்டக்குடி, செம்பியநல்லூா் போன்ற கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் மழை காரணமாக சாய்ந்து சேதமடைந்துள்ளன.

எனவே இப்பகுதி விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை நேரில் பாா்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments