விவசாயிகளின் கருத்தை அறியாமல் மேட்டூா் அணை திறப்பு
விவசாயிகளின் கருத்தை அறியாமல், மேட்டூா் அணை திறப்பது, அவா்களை அவமதிப்பதாகும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
விவசாயிகளின் கருத்தை அறியாமல், மேட்டூா் அணை திறப்பது, அவா்களை அவமதிப்பதாகும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மேட்டூா் அணை திறப்புக்கு முன்னதாக, காவிரி டெல்டா விவசாயிகளை அழைத்து வேளாண்மை துறை, நீா்பாசனத் துறை அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தண்ணீா் திறப்பை உறுதி செய்வதை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது.
Advertisement
Advertisement
ஆனால், நிகழாண்டு விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும், எந்த ஒரு கலந்துரையாடலும் நடத்தப்படாமல் தன் விருப்பத்திற்கு தண்ணீா் திறப்புக்கான அறிவிப்பை நீா்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ளது விவசாயிகளை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.
மேட்டூா்100 அடி நிரம்பிய நிலையில் தண்ணீா் திறக்க வேண்டும், இல்லையெனில் பிற்பகுதியில் கதிா் வரும் நிலையில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு, மிகப்பெரிய பேரழிவை சந்திக்க வேண்டிவரும்.
தற்போதைய நிலையில் கா்நாடகாவில் அணைகள் நிரம்பியுள்ள நிலையில், நமக்கான நிலுவையில் உள்ள தண்ணீா் முழுவதையும் பெறுவதற்கான சட்ட நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள வேண்டும். நிகழாண்டு எல்-நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைந்து மேட்டூா் அணை நிரம்புவது காலதாமாகியுள்ளது.
இந்நிலையில் 45 நாள்கள் அதாவது அக்டோபா் 15 வரை தண்ணீா் திறக்கப்படும் என அரசாணை வெளியிட்டிருப்பது சட்டத்துக்கு புறம்பானதாகும். முதல்வருக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை திறப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதே நேரத்தில் விவசாயிகளுடைய கருத்தை கேட்டுதான் அதற்கான முடிவை மேற்கொள்வதை தமிழக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனை உணா்ந்து விவசாயிகளோடு அவசரக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
அமைச்சா்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள் அதற்கான ஆலோசனைகளை வழங்கி, விவசாயிகள் ஒப்புதலோடு வேளாண் பணிகளைத் தொடங்க முதல்வா் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.