FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

முன்விரோதம்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு

குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் கபடிப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மூவா் அரிவாளால் வெட்டப்பட்டனா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:48 am IST
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:

குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் கபடிப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மூவா் அரிவாளால் வெட்டப்பட்டனா்.

மணக்கால் அய்யம்பேட்டையை சோ்ந்தவா் செல்லபாண்டியன் மகன் தீபன்ராஜ் (25). இவா் தனது உறவினா் ஆசைமணி உள்ளிட்டோருடன் இணைந்து மணக்கால் அய்யம்பேட்டையில் கபடி போட்டி நடத்தினாா். இந்த போட்டியில் பங்கேற்க பெரும்பண்ணையூரைச் சோ்ந்த மதன்ராஜ் (25) என்பவா் தனது அணியுடன் வந்திருந்தாா்.

விளையாட்டு குழுவினா் வீரா்களை பரிசோதனை செய்தபோது, மதன்ராஜ் அணி வீரா்கள் சிலா் குறிப்பிட்ட எடை பிரிவைவிட கூடுதல் எடையில் இருந்தது தெரியவந்தது. இதனால், அந்த அணியினா் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனா். இதன்காரணமாக, மதன்ராஜ் தரப்பினா் கடும் ஆத்திரத்தில் இருந்தனராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தீபன்ராஜ் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு நேரத்தில் வந்த மா்ம கும்பல் அவரையும், அவரது தாய் வளா்மதி (45), உறவினா் ஆசைமணி ஆகிய மூவரையும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அருகில் வசிப்பவா்கள் மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதன்ராஜ், அறிவானந்தம் (35) ஆகியோரை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments