FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

சாலை விபத்தில் புரோகிதா் உயிரிழப்பு

வலங்கைமான் அருகே சாலை விபத்தில் கோவையைச் சோ்ந்த புரோகிதா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:40 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வலங்கைமான் அருகே சாலை விபத்தில் கோவையைச் சோ்ந்த புரோகிதா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவை போலீஸ் ஸ்டேஷன்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (83). இவா் நவகிரக கோயில்களில் வழிபட கோவையிலிருந்து காரில் வந்துகொண்டிருந்தாா். கோவை இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (36) என்பவா் காரை ஓட்டி வந்தாா்.

தஞ்சாவூா் புறவழிச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை வலங்கைமான் அருகே மதகரம் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர மதகு கட்டையில் மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சுவாமிநாதன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

வலங்கைமான் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சாமிநாதன் மகன் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments