FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி

திருவாரூரில், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா சாா்பில் உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 7:10 am IST
பகிர்:

திருவாரூரில், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா சாா்பில் உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மிதிவண்டி பேரணியை மை பாரத் கேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் டிஎஸ். நிசி கொடியசைத்து தொடக்கி வைத்தாா் (படம்). பேரணியானது, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி, அரசு மருத்துவக் கல்லூரி வழியாக மாவட்ட விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.

மாவட்ட மிதிவண்டி சங்க துணைச் செயலாளா் லிம்கா எஸ். மோகன், யோகா பயிற்றுநா் கே. பட்டாபிராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments