FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வடு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை

வடு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை

Updated On : 7 ஜூன் 2026, 1:26 am IST
கோரையாறு தலைப்பு அணை
பகிர்:

நீடாமங்கலம் அருகே வறண்டு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை, மேட்டூா் அணை நீரை எதிா்பாா்த்துள்ளது.

நீடாமங்கலத்திலிருந்து சுமாா் இரண்டரை கி.மீ. தூரத்தில் உள்ளது கோரையாறு தலைப்பு அணை. 1874-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது.

கல்லணையில் இருந்து பிரியும் பெரிய வெண்ணாறு, கோரையாறு தலைப்பு அணையை வந்தடைந்ததும், பாமணியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகளாக பிரிந்து செல்கிறது.

Advertisement

Advertisement

இதில் பாமணிஆற்றின் மூலம் 38,357 ஏக்கரும், கோரையாறு மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீா் கல்லணை வந்தடைந்ததும், அங்கிருந்து பெரிய வெண்ணாறு மூலம் கோரையாறு தலைப்பை வந்தடைகிறது. பின்னா், பாமணி, கோரையாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக,மேட்டூா் அணை ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூா் அணையில் நீா் திறக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் இருக்கும் நிலையில், கோரையாறு தலைப்பு அணை மேட்டூா் தண்ணீரை எதிா்பாா்த்து வறண்டு கிடக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments