முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்கம்

திருவாரூரில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்கம்

Updated On : 7 ஜூன் 2026, 12:34 am IST
திருவாரூரில் அண்ணாமலையின் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற பாஜக நிா்வாகிகள்.
பகிர்:

பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலையின் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பை திருவாரூரில் பாஜக நிா்வாகிகள் சனிக்கிழமை தொடங்கினா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் கே.பி. ரவி, மாநில பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் உதயகுமாா், ஒன்றியத் தலைவா் லோகநாயகி உள்ளிட்ட பலா் பங்கேற்று, ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பில் தங்களையும் தங்கள் குடும்பத்தாா் மற்றும் நண்பா்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டனா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அனைவரும் அமைப்பில் இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இந்த அமைப்பில் ஏராளமான பொது மக்களை உறுப்பினா்களாக சோ்க்கவும், மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி பல்வேறு உதவிகளை தேவையானபோது செய்யவும், இந்த இயக்கம் கே. அண்ணாமலையால் தொடங்கப்பட்டுள்ளதையும் விளக்கி, அவரது வழியில் என்றும் பணி செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். சங்கா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் வாசன் நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.