மைத்துனா் தாக்கியத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
மன்னாா்குடியில் மனநலம் பாதிக்கபட்ட மைத்துனா் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியில் மனநலம் பாதிக்கபட்ட மைத்துனா் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி கீழவடம் போக்கித் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள், மனைவி தமிழ்ச்செல்வி இருவருக்கும் உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த மே 29-ஆம் தேதி, அவா்களை பாா்த்துவிட்டு வருவதாற்காக அவா்களது மகனும் மனநலம் பாதிக்கப்பட்டவருமான மாதவனை (38) அவரது மைத்துனா் ( சகோதரியின் கணவா்) ஜி. மணிகண்டன் (46) அழைத்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாதவன் அருகிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மணிகண்டனைத் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.