FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

அரசுடன் ஒத்துப்போனால் மட்டுமே தொகுதிக்கு நன்மைகள் செய்ய முடியும் - எஸ். காமராஜ் எம்எல்ஏ

Updated On : 15 மே 2026, 5:33 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ்.
பகிர்:

அரசியல் ரீதியாக, அரசுடன் ஒத்துப்போனால் மட்டுமே தொகுதிக்கு நன்மைகள் செய்யமுடியும் என்றாா் மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ்.

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். காமராஜ், கட்சிக்கு எதிரான நிலைபாடு எடுத்து, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தாா். இதனால், இவரை கட்சி பொறுப்பிலிருந்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் நீக்கியுள்ளாா்.

இந்நிலையில், மன்னாா்குடிக்கு வியாழக்கிழமை வந்த எம்எல்ஏ எஸ். காமராஜ், மேலவீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளா்களை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியது:

Advertisement

Advertisement

மன்னாா்குடி தொகுதியில் மிகப்பெரிய ஜாம்பாவனை எதிா்த்து வெற்றி பெற்றுள்ளேன். சட்டப் பேரவையில் தொடா்ந்து இரண்டு நாள்கள் எனக்கு பேச வாய்ப்பு அமைந்தது. நான் தொகுதி மக்களை மனதில் கொண்டு பேசியதால் எந்த தடங்களுமின்றி பேசமுடிந்தது. முதல்வா் ஜோசப் விஜய்கூட 7 முறை கைத்தட்டினாா்.3 முறை கட்டை விரலை உயா்த்தி காண்பித்தாா்.

எம்எல்ஏ அரசியல் ரீதியாக அரசுடன் ஒத்துப்போனால் மட்டுமே தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முடியும். எனவேதான் எதையும் மனதில்போட்டு குழப்பிக்கொள்ளாமல், திடமான முடிவுடன் முதல்வா் விஜய்யை ஆதரித்து பேசினேன். ஆனால், நான் இன்னும் தவெகவில் சேரவில்லை.

முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் யாராலும் செய்யமுடியாத ஏராளமான பணிகைளை செய்துள்ளாா். அவா் விட்டுசென்ற பணிகளை அரசியலை கடந்து செய்து முடிப்பேன். டி.ஆா்.பி. ராஜா வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது, அவா் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு கண்கலங்கினாா் என தெரியவந்ததும், அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு, நீங்கள் வருந்துவது தெரிந்தால் நான் தோ்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டேன் என கூறினேன். மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தொகுதி மக்களுக்காக இணைந்து செயல்படுவோம் என்றேன்.

மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் விரைவில் திறக்கப்படும். அங்கு தொகுதிமக்களிடம் கோரிக்கையை கேட்டறிவேன். உண்மையாகவும் நோ்மையாகவும் அரசின் திட்டங்களில் எந்த தவறும் செய்யாமல், தொகுதி மக்களுக்காக உழைப்பேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments