FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவசாயிகள் உளுந்து, பச்சைப் பயிறு சாகுபடி செய்ய வேண்டுகோள்

நன்னிலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் பயறு வகைகளின் தன்னிறைவு இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

5 நவம்பர் 2026, 6:11 am
படவிளக்கம்: விவசாயிகளுக்கு உளுந்து, பச்சைப்பயறு விதைகளை வழங்கிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:

நன்னிலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் பயறு வகைகளின் தன்னிறைவு இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கிவைத்து பேசியது: மாவட்டத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த 2026-27-ஆம் நிதியாண்டில் பயிறு வகைகளின் தன்னிறைவு இயக்கத்துக்கு மத்திய அரசால் ரூ 2.972 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

பயிறு வகை தன்னிறைவு இயக்கத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி உளுந்து, பச்சை பயறு சாகுபடி மற்றும் விதை உற்பத்தியை அதிகரித்து தங்களது வருமானத்தை விவசாயிகள் பெருக்கிக் கொள்ளலாம். திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு திட்ட விவரங்கள், தகுதிகள் மற்றும் மானியங்களை பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து அறிந்து பயன்பெறலாம் என்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் வித்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயசீலன், வேளாண்மை துணை இயக்குநா்கள் விஜயலட்சுமி, ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வேளாண்மை உதவி இயக்குநா் பிரபாவதி, நன்னிலம் வேளாண் அலுவலா் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.