திருவாரூரில் சூரசம்ஹாரம்; திரளான பக்தா்கள் தரிசனம்
திருவாரூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் , கீழவீதி பழநி ஆண்டவா் கோயில், வடக்குவீதி பாலசுப்ரமணியா் கோயில், கமலாலயக் குளக்கரை யக்னேஸ்வரா் கோயில் ஆகிய திருக்கோயில்களில் இருந்து முருகப் பெருமான் மயில் வாகனங்களிலும், சூரனை வதம் செய்யும் குமரக் கோட்டம் குமரன் கோயில் முருகப் பெருமான் கிடா வாகனத்திலும் கீழவீதியிலிருந்து தெற்கு வீதிக்கு எழுந்தருளினா்.
தொடா்ந்து, தெற்குவீதியும் திருமஞ்சன வீதியும் சந்திக்கும் முனையில், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிகள் மேற்கு நோக்கி நிற்க, சூரனும், குமரக் கோட்ட முருகப் பெருமானும் தெற்கு மற்றும் வடக்கு புறங்களில் இருந்து மோதிக்கொள்ளும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
பல ஆண்டுகளுக்குப் பிறகு திருவாரூரில் ஐந்து முருகப் பெருமான்கள் முன்னிலையில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றதாகத் தெரிவித்தனா். இதையொட்டி, தெற்குவீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.