முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருவது குறித்து...
முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகள் உள்பட இதர புகழ் பெற்ற திருத்தலங்களில் சூரசம்ஹார நிகழ்வு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சூரசம்கார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.
குறிப்பாக சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து படிகட்டுகள் வழியாக மலைகோவிலுக்கு சென்று சூரசம்கார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.
சூரசம்காரம் மற்றும் நாளை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு பக்தர்களின் வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக அனுமதிக்கப்பட்டனர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.