FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். - dps
பகிர்:

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும்.

இவ்வாண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ. 10) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

Advertisement

Advertisement

கந்த சஷ்டியை முன்னிட்டு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளினார்.

தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

கந்த சஷ்டியை முன்னிட்டு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளினார்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை துவக்கினர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பாடல்களைப் பாடியும், ஓம் சரவண பவ எழுதியும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.