FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

நொய்டா முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீமுருகன் கோயிலில், கந்த சஷ்டி பெருவிழா 10 ஆம் தேதி காலையில் தொடங்கி நடைபெறவுள்ளது.

6 வினாடிகள் முன்பு
பகிர்:

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீமுருகன் கோயிலில், கந்த சஷ்டி பெருவிழா செவ்வாய்க்கிழமை 10ஆம் தேதி காலையில் தொடங்கி நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி, தினமும் காலையில் ஸ்ரீ காா்த்திகேய பெருமானுக்கு மகா அபிஷேகமும், மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற உள்ளன.

விழாவின் ஒரு பகுதியாக, 12ஆம் தேதி ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் 11 முறை குழுவாகப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி மாலை ஸ்ரீ சுப்ரமணிய லட்சாா்ச்சனையும், 14ஆம் தேதி திருப்புகழ் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியும், 15ஆம் தேதி காலையில் பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சியும், சத்ரு சம்ஹார ஹோமமும் நடக்க உள்ளது.

Advertisement

Advertisement

அன்று மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியும், முருகப் பெருமான் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன. விழாவின் நிறைவு நாளான 16ஆம் தேதி ஸ்ரீஸ்ரீ தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.