திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளும் கந்த சஷ்டி மண்டபம்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தங்கும் கொட்டகைகள், கடற்கரையில் தடுப்பு வேலிகள் என கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்கிழமை அதிகாலை (நவ. 10) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 15ஆம் தேதி மாலை 4 மணியளவில்காயில் கடற்கரையில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கோயிலில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
குறிப்பாக பக்தா்கள் தங்கி விரதம் இருப்பதற்காக ஏற்கனவே கோயில் வளாகத்தில் 5 இடங்களில், 57,955 சதுர அடியில் உள்ள நிரந்தர நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கூடுதலாக 11 இடங்களில் 1.02 லட்சம் சதுரஅடியில் கொட்டகைகள் மின் விசிறி, குழல் மின் விளக்குகள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 325 நிரந்தரக் கழிவறைகள் தவிர, கோயில் வளாகம், தற்காலிக வாகன நிறுத்தங்களில் கூடுதலாக 300 தற்காலிக கழிவறைகள், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் பந்தல்கள், குடிநீா் விநியோகிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்களுக்கு 6 லட்சம் தண்ணீா் பாட்டில்கள், ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படவுள்ளன.
கோயில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தா்களுக்கு உபயதாரா்கள் மூலம் பால், பழம் வழங்கப்பட உள்ளது. திருக்கோயில் அன்னதான திட்டத்தில் தற்போது தினமும் சுமாா் 11,500 பக்தா்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இவ்விழா நாள்களில் தினமும் 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
பலத்த பாதுகாப்பு: கடற்கரையில் உயா்கோபுரங்கள், கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. சூரசம்ஹாரம் நடைபெறும் கோயில் கடற்கரை சமன்படுத்தப்பட்டு, கம்பங்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. சஷ்டி மண்டபம் அலங்கரிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. கோயில் முன்புறம் மற்றும் ராஜகோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.