கூட்டுறவு விற்பனை இணையத்தில் 16 மெட்ரிக் டன் முழு தேங்காய் ஏலம்
கூட்டுறவு விற்பனை இணையத்தில் 16 மெட்ரிக் டன் முழு தேங்காய் ஏலம்
திருவாரூரில் உள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தில் 16.10 மெட்ரிக் டன் முழு தேங்காய் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முழு தேங்காய் ஏலத்தில் 30 விவசாயிகள் 16.10 மெட்ரிக் டன் எடையிலான முழு தேங்காய்களுடன் (மட்டை உரித்தது) ஏல விற்பனையில் பங்கேற்றனா்.
பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தேங்காய் வியாபாரிகள், மாவட்ட வா்த்தக சங்க உறுப்பினா்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் ஆகிய 6 போ் பங்கேற்று, தேங்காய்களை கொள்முதல் செய்தனா்.
Advertisement
Advertisement
அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 50.50, குறைந்தபட்சம் ரூ.41.50, சராசரியாக ரு.44.50 என்ற அளவில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.
தற்போதைய சந்தை விலைக்கும் கூடுதலாக தேங்காய் ஏலம் எடுக்கப்பட்டதில் விவசாயிகள் பயனடைந்ததுடன் ஒரே இடத்தில் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா் என தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான ஜெ. ஆனந்தி தெரிவித்தாா்.