சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 40 ஆண்டுகள் சிறை
நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நன்னிலம் தாலுகா, முடிகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (66). இவா், கடந் 2021-இல், தனியாக வீட்டிலிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். இது தொடா்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ராமசாமியை கைது செய்தனா்.
திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை முடிவடைந்ததைத் தொடா்ந்து, குற்றவாளி ராமசாமிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜி. சரத்ராஜ் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement