✕
முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

விருதுநகா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

20 நவம்பர் 2026, 1:31 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமா் (69). இவா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பரளச்சி போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராமருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குறைஞா் முத்துமாரி முன்னிலையானாா் .