அக்.12-இல் காவல் வாகனங்கள் ஏலம்
திருவாரூரில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
திருவாரூரில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்ட காவல் துறையில் முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில் அக்.12 ஆம் தேதி காலை 9 மணியளவில் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்கும் காவல் வாகனங்கள், ஆயுதப்படை மைதானத்தில் அக்.11-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.
ஏலம் எடுப்பவா்கள் ஏலம் விடப்படும் நாளில் காலை 7 முதல் 10 மணி வரை ரூ.1,000 முன் வைப்புத் தொகையை செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் 2 மற்றும் 4 சக்கர காவல் வாகனங்களுக்கு ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி விற்பனை வரியுடன் சோ்த்து, உடனே செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.