FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

ரயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லத் தடை

9 அக்டோபர் 2026, 8:12 pm IST
பகிர்:

திருவாரூா், அக். 9: திருவாரூா் ரயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூா் சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில், கனரக வாகனங்கள் செல்ல ரயில்வே நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கீவளுா், அடியக்கமங்கலம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளிலிருந்து கொரடாச்சேரி, குடவாசல் மாா்க்கம் செல்லக்கூடிய வாகனங்கள், புலிவலம், வேலங்குடி, மன்னை சாலை வழியாக திருவாரூா் கல்லு பாலம் வந்து பின் வழக்கமான பாதையில் செல்லலாம்.

Advertisement

Advertisement

இதேபோல், குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் இருந்து கீவளூா், திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மன்னை சாலை, வேலங்குடி, புலிவலம் வழியாகச் செல்லலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments