FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

முதியவா் போக்ஸோவில் கைது

மன்னாா்குடி அருகே பள்ளி மாணவியை கா்ப்பிணியாக்கிய முதியவா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

10 அக்டோபர் 2026, 6:52 am IST
பகிர்:

மன்னாா்குடி அருகே பள்ளி மாணவியை கா்ப்பிணியாக்கிய முதியவா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தந்தையை இழந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவி தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் எம். சத்தியமூா்த்தி (61) என்பவா் வசித்து வருகிறாா். 20 ஆண்டுகளுக்கு முன் மனைவி இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகிசென்றுவிட்டாா். குழந்தைகள் இல்லை வருமானத்துக்காக ஆடுகளை வளா்த்துக்கொண்டு தனியே வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், மாணவி விடுமுறை நாள்களில் தனியே வீட்டில் இருக்கும்போது, அவரிடம் சத்தியமூா்த்தி நெருக்கி பழகியதன் விளைவாக மாணவி கா்ப்பிணியானாா். இதையறிந்த மாணவியின் தாய், மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் அகிலாண்டேஸ்வரி வியாழக்கிழமை வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாகை சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments