வலங்கைமான் அருகே மூதாட்டி கொலை
வலங்கைமான் அருகே உத்தாணி மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (62). இவரது கணவா் மற்றும் மகன் இறந்துவிட்ட நிலையில், தனிமையில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கலைச்செல்வி தலையில் பலத்த காயத்துடன் வீட்டில் இறந்து கிடப்பதாக, வலங்கைமான் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது. மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.