FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் 39 மி.மீ மழை

திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 39. 6 மி.மீ மழை திங்கள்கிழமை பதிவானது.

21 அக்டோபர் 2026, 3:34 am IST
மழை - கோப்புப் படம்
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 39. 6 மி.மீ மழை திங்கள்கிழமை பதிவானது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்யாத நாள்களில் குளிா்ந்த வானிலை நிலவுகிறது. இதற்கிடையே, ஆயுத பூஜை நாளான திங்கள்கிழமை பிற்பகலில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திங்கள்கிழமை காலை 6 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 39.6 மி.மீ மழை பெய்தது. இதனால், ஆயுதபூஜை கொண்டாட்டங்களில் சிறிய அளவிலான சுணக்கம் ஏற்பட்டது. ஆயுதபூஜைக்குப் பின்னா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் வலம் வருவது வழக்கம். மழை காரணமாக, ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், பகல் முழுவதும் இருண்ட வானிலை நிலவியதால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன.

இதேபோல், வலங்கைமானில் 31, நீடாமங்கலத்தில் 24, பாண்டவையாா் தலைப்பில் 15.2 மி.மீ என மொத்தம் 123.10 மி.மீ மழை, திருவாரூா் மாவட்டத்தில் பெய்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments