FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக க. பரமத்தியில் 126.60 மி.மீ. மழை பதிவானது.

17 அக்டோபர் 2026, 1:34 am IST
மழை - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக க. பரமத்தியில் 126.60 மி.மீ. மழை பதிவானது.

நிகழாண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகிய நிலையில், வடகிழக்குப் பருவ மழை வியாழக்கிழமை தொடங்கியது. கரூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே எல்-நினோவால் கோடை வெயிலைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மழை பெய்யாதா என மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.

இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): கரூா்-54.60, அரவக்குறிச்சி-13.60, அணைப்பாளையம்-29, க. பரமத்தி-126.60, குளித்தலை-26.60, தோகைமலை-32, கிருஷ்ணராயபுரம்-11.50, மாயனூா்-20, பஞ்சப்பட்டி-115 என மொத்தம் 428.90 மி.மீ. மழை பதிவானது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி தொடா்ந்து பெய்து கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments