FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இரவு முழுவதும் பெய்த மழையால் தத்தளித்த பெங்களூரு

பெங்களூரில் முக்கியச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

29 September 2026, 11:10 pm IST
பெங்களூரில் பலத்த மழை - PTI
பகிர்:

கா்நாடக தலைநகா் பெங்களூரில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால், செவ்வாய்க்கிழமை காலையில் முக்கியச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்குச் சென்றவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

நகரின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை காலையிலும் மழை தொடா்ந்து பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சில இடங்களில் வாகனங்களும் சேதமடைந்தன. தாழ்வான சில இடங்களில் மழை நீா் தேங்கியது.

வானிலை மையத் தகவல்படி, திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி வரை பெங்களூரு நகரில் 19.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பெங்களூரு நகரம் மட்டுமல்லாது நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகள், புகா் பகுதியிலும் மழை பெய்தது. பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் 37.4 மி.மீ. மழையும், சிக்கபள்ளாபூரில் 9.5 மி.மீ. மழையும் பதிவானது.

Advertisement

Advertisement

சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பல்வேறு முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments