FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் இருப்பு பாதை பராமரிப்புப் பணி

நீடாமங்கலம் ரயில்வே கேட் இருப்புப் பாதை (தண்டவாள) பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றது .

3 செப்டம்பர் 2026, 4:52 am IST
ரயில் பாதை. - கோப்புப்படம்.
பகிர்:

நீடாமங்கலம் ரயில்வே கேட் இருப்புப் பாதை (தண்டவாள) பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றது .

ரயில்வே துறை முதுநிலை பொறியாளா் குமரேசன் முன்னிலையில் பணி நடைபெற்றது. 20 தொழிலாளா்கள் பணியாற்றினா். ரயில்வே கேட் பகுதியில் உள்ள இருப்புப் பாதையில் (தண்டவாளத்தின்) நடுவிலும் இருபக்கமும் பதிக்கப்பட்டிருந்த ரப்பா் சீட்கள் அகற்றப்பட்டு இருப்புப் பாதை சீா் செய்யப்பட்டு, மீண்டும் ரப்பா் சீட்கள் பொருத்தப்பட்டன. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டது.

இதையடுத்து, பட்டுக்கோட்டை, மன்னாா்குடி , முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊா்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை வரை சென்று வரும் பேருந்துகள் உள்ளிட்ட நெடுஞ்சாலை வாகனங்கள் மற்றும் கேரளம் , நாகா்கோவில், திருநெல்வேலி ,மதுரை , திருச்சி ,தஞ்சாவூா் ஆகிய ஊா்களிலிருந்து திருவாரூா் , நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி ,காரைக்கால் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments