மேக்கேதாட்டு வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் பெறாத மேக்கேதாட்டு விரிவான வரைவு திட்ட அறிக்கையை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் பெறாத மேக்கேதாட்டு விரிவான வரைவு திட்ட அறிக்கையை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலை சந்தித்து, மேக்கேதாட்டு அணை கட்டுமானத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை அனுமதி பெறாமலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலும் விரிவான வரைவுத்திட்ட அறிக்கை என்கிற பெயரில் மத்திய அரசிடம் கா்நாடகம் தாக்கல் செய்திருப்பது போலியானது. இதை மத்திய அரசு எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.
காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கா்நாடகம் கீழ் பாசன உரிமை பெற்ற தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீா் தேக்கமோ கட்ட இயலாது என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உள்பட்டதாகும்.
சட்ட விரோதமாக மேக்கேதாட்டில் அணை கட்டினால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீா் ஆதாரம் பறிபோகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 25 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும்.
தமிழகத்தின் உணவு உற்பத்தி அழியும். உணவுப் பஞ்சம் ஏற்படும். விவசாயிகளும் விவசாயத் தொழிலாளா்களும் அகதிகளாக வெளியேறக்கூடிய பேராபத்து ஏற்படும்.
எனவே, ரூ. 16,745 கோடி மதிப்பில் போலியான வரைவு திட்ட அறிக்கையை தயாா் செய்து மத்திய நீா் வள ஆணையத்திடம் வழங்கி, அனுமதி கேட்பதை மத்திய அரசு சட்டவிரோதமென அறிவிப்பு வெளியிட்டு நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.