FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆஜராகவில்லை என்றால் பிடிஆணை பிறப்பிக்கப்படும்: தில்லி மகளிர் ஆணையத் தலைவர் தகவல்

தில்லி மகளிர் ஆணையத்தின் அழைப்பாணைகளை (சம்மன்) மதிக்காதவர்கள் மீது பிடிஆணை (வாரண்ட்) பிறப்பிக்கப்படுவதுடன், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தில்லி மகளிர் ஆணையத்தின் அழைப்பாணைகளை (சம்மன்) மதிக்காதவர்கள் மீது பிடிஆணை (வாரண்ட்) பிறப்பிக்கப்படுவதுடன், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தில்லி மகளிர் ஆணைய சட்டம்-1994இன்படி, தில்லி மகளிர் ஆணையத்துக்கு ஒரு சிவில் நீதிமன்றத்துக்கான அதிகாரங்கள் உள்ளன. சிவில் நீதிமன்ற நடைமுறையின்படி, அழைப்பாணையை மதிக்காத ஒருவரை கைது செய்ய இயலும். அதேபோல, தில்லி மகளிர் ஆணையத்தின் அழைப்பாணைகளை மதிக்காதவர்களுக்கு, பிடிஆணை பிறப்பிக்கவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளது.

Advertisement

Advertisement

மகளிர் ஆணையத் தலைவராக நான் பொறுப்பேற்றதும், பல்வேறு புகார்களில் அழைப்பாணை அனுப்பப்பட்ட நபர்கள், ஆணையம் முன்பு ஆஜராகாமல் இருப்பதை கண்டறிந்தேன்.

அதையடுத்து, தில்லி மகளிர் ஆணையச் சட்டத்தை படித்தேன். அப்போது, மகளிர் ஆணையத்துக்கு மேற்கண்ட அதிகாரங்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். மேலும், இதுதொடர்பாக முன்னாள் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கிடம் கருத்துகளை கேட்டேன். அப்போது, தில்லி மகளிர் ஆணையத்துக்கு அழைப்பாணை பிறப்பிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் இருக்கிறது என எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கமளித்தார். இந்த அதிகாரங்களை கடந்த காலங்களில் பயன்படுத்தாதது, வியப்பளிக்கிறது.

மகளிர் ஆணையத்தின் அழைப்பாணைகளை மதிக்காதவர்கள் மீது இனிமேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்வாதி மாலிவால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments