FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கலப்பையை திரும்ப வழங்க கோரி நஜீப் ஜங்குக்கு யோகேந்திர யாதவ் கடிதம்

விவசாயிகளின் பிரச்னைகளை வலியுறுத்தி, தில்லியில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கலப்பையை திரும்ப வழங்க வேண்டும் என்று ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான யோகேந்திர யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

விவசாயிகளின் பிரச்னைகளை வலியுறுத்தி, தில்லியில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கலப்பையை திரும்ப வழங்க வேண்டும் என்று ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான யோகேந்திர யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் போராட்டத்தின் அடையாளச் சின்னமான அந்த கலப்பையை, எங்களிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக நீங்கள் உறுதி அளித்தீர்கள். ஆனால், எதிர்காலங்களில் எந்த போராட்டத்தின்போதும் அந்த கலப்பையை பயன்படுத்தக் கூடாது என்று போலீஸார் நிபந்தனை விதிக்கின்றனர். அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே கலப்பையை திருப்பித் தருவதாக கூறுகின்றனர். போலீஸாரின் நிபந்தனை, சட்டவிரோதமானதாகும். விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளை மீறும் இதுபோன்ற நிபந்தனையை நாங்கள் ஏற்கமாட்டோம். இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, அந்த கலப்பையை மீண்டும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் நஜீப் ஜங் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டி, யாதவும், ஸ்வராஜ் அபியான் தொண்டர்களும், தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்து மிகப்பெரிய கலப்பையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments