ஜேஎன்யு பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்ற முதல் காஷ்மீர் மாணவி!
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமை ஷெல்லா ரஷீத் ஷோராவுக்கு கிடைத்துள்ளது.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமை ஷெல்லா ரஷீத் ஷோராவுக்கு கிடைத்துள்ளது.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு, இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அனைந்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஷோரா போட்டியிட்டார். அதில், 1,387 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம், நிகழாண்டு தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் வேலன்டினா பிரம்மாவை, 234 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஷோரா, மாணவர் சங்கத் துணை தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அப்போது, அவர் கூறியதாவது:
காஷ்மீர் சிறார்கள், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோர் தொடர்புடைய பிரச்னைகளுக்காக, நான் குரலெழுப்பினேன். ஆனால், அங்கு அரசியலில் பெண்களுக்கான இடம் மிக குறைவு. இடதுசாரி கட்சிகளிடம் வளர்ச்சிக்கான கொள்கை உள்ளது. அதுவே, நமது நாட்டுக்கு தேவையாகும். எனது இந்த பதவிக் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடுதல் விடுதி வசதி, 24 மணிநேர மருத்துவ மையம், மாணவர்களுக்கான பாதுகாப்பு மேம்பாடு ஆகிய விவகாரங்களில் கவனம் செலுத்துவேன் என்றார் ஷோரா.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.