FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிடிஇஏ பள்ளிகளில் ஹிந்தி தின கொண்டாட்டம்

தில்லி தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் திங்கள்கிழமை ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தில்லி தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் திங்கள்கிழமை ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது.

மொழியின் இன்றியமையாமை, சிறப்பை மாணவர்கள் புரிந்து கொள்ளவும் மாணவர்கள் பன்மொழித் திறன்மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கிலும் இத் தினத்தைக் கொண்டாடும்படி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் ராஜு அறிவுறுத்தியதன் பேரில், பூசா சாலை தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை அதன் முதல்வர் சித்ராவாசகம் தொடக்கிவைத்தார். ஆறாம் வகுப்பு மாணவி சித்ரா இந்தி மொழி பற்றியும் தேசத் தலைவர்கள் நேரு, இராஜேந்திர பிரசாத் போன்றோரின் கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

மோதிபாக் தமிழ்ப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி சுவேதா ஹிந்தி மொழியின் சிறப்பு பற்றி எடுத்துக்கூறினார். ஹிந்தி ஆசிரியை இலக்குமி முகுந்த் மொழியின் இன்றியமையாமையை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் இரஞ்சன் குப்தா வாழ்த்துரை வழங்கினார்.

Advertisement

Advertisement

மந்திர் மார்க் தமிழ்ப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி பவானி இந்தி மொழியின் வளர்ச்சி குறித்து கவிதை வாசித்தார். ஆசிரியை மீனா "அன்று முதல் இன்று வரை இந்தி மொழியின் பயணம்' என்ற தலைப்பில் பல கருத்துகளை எடுத்துரைத்தார். பள்ளியின் துணை முதல்வர் வனஜா கேப்ரியல் வாழ்த்துரை வழங்கினார். லோதி வளாகம் தமிழ்ப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி சாருள் இந்தியிலும் 11 ஆம் வகுப்பைச் சார்ந்த சுவாதி ராவ் ஆங்கிலத்திலும் இந்தி மொழி பற்றி உரையாற்றினர்.

பள்ளியின் துணை முதல்வர் உமா ரவி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டினார். இராமகிருஷ்ணபுரம் பள்ளியில் தொடக்கநிலைப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் குழுப் பாடல் பாடினர். பள்ளியின் முதல்வர் மைதிலி மும்மொழிக் கற்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. அனைத்தையும் கற்று பயன்பெறுங்கள் என்றார்.

ஜனக்புரி தமிழ்ப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி கஷிஷ் உரையாற்றினார். பள்ளியின் முதல்வர் இராஜி கமலாசணன் இந்தி மொழி பற்றியும் சிறப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இலக்குமிபாய் நகர்த் தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் உரை இடம் பெற்றது. பள்ளியின் துணை முதல்வர் மீனா சகானி பாராட்டிப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments