FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் மீது தாக்குதல்

தேசிய தலைநகர் வலயப் பகுதியான ஃபரீதாபாதில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தேசிய தலைநகர் வலயப் பகுதியான ஃபரீதாபாதில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஃபரீதாபாத் மாவட்ட ஆட்சியர் சார்பில் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபரீதாபாதில் உள்ள மவாய் கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கைக்காக, துணை ஆட்சியர் சியாம் சிங், ஃபரீதாபாத் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் குமார், வருவாய்த் துறை அதிகாரி வீரேந்திரா ஆகியோர் சென்றனர்.

Advertisement

Advertisement

ஆக்கிரமிப்பு நிலமொன்றில் கட்டப்பட்டிருந்த சுவரை ஜேசிபி மூலம் இடித்துக் கொண்டிருந்தபோது, கையில் உருட்டுக் கட்டைகள், இரும்புக் கம்பிகளுடன் அங்கு வந்த கிராம மக்கள் சிலர், அதிகாரிகளையும், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரையும் சரமாரியாக தாக்கி விரட்டியடித்தனர். இந்த தாக்குதலில், பல அதிகாரிகள், போலீஸார் காயமடைந்தனர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments