FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோயில்களில் பழனி முதலிடம்!

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோயில்களில் குறித்து...

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். - கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 கோயில்களில், ரூ.233.50 கோடியுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அதிக வருமானம் ஈட்டும் முதல், 10 முன்னணி கோயில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள முதல் பத்து கோயில்களில் ஒட்டுமொக்க ஆண்டு வருமானம் ரூ.941.99 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதிக வருமானத்துடன் திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரூ. 233.50 கோடியுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ரூ.139.06 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயில் ரூ.131.38 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இதனைத் தொடர்ந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்ல், ரூ.111.09 கோடி, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் ரூ.74.98 கோடி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ரூ.73.72 கோடி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ரூ.64.33 கோடி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ரூ.50.57 கோடி மதுரை கள்ளழகர் கோயில் ரூ.34.20 கோடி, ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் ரூ.29.16 கோடி வருவாயுடன் பத்தாம் இடத்தில் உள்ளது.

இந்த வருவாய் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, நாள்தோறும் வந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக செய்யப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அன்னதான திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணிகள் போன்றவற்றுக்கு முழுமையாக பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Palani tops the list of the 10 temples that generate the most revenue in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments