"தெற்கு தில்லியில் 70% செல்லிடப்பேசி கோபுரங்கள் சட்டவிரோதமானவை'
தெற்கு தில்லியில் சுமார் 70 சதவீத செல்லிடப்பேசி கோபுரங்கள் சட்டவிரோதமானவை என்று தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தெற்கு தில்லியில் சுமார் 70 சதவீத செல்லிடப்பேசி கோபுரங்கள் சட்டவிரோதமானவை என்று தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது: இந்த மாநகராட்சியில், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், நஜஃப்கர் மண்டலம் என 4 மண்டலங்கள் உள்ளன.
இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 3,670 செல்லிடப்பேசி கோபுரங்கள் உள்ளன. இதில் 2,537 கோபுரங்கள் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மீதமுள்ள 1,133 செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அனுமதி உள்ளது.
மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக 1,108 செல்லிடப்பேசி கோபுரங்கள் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத செல்லிடப்பேசி கோபுரங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவுவதற்கு, மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களின் மேற்கூரைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, வடக்கு தில்லியிலுள்ள 2,539 செல்லிடப்பேசி கோபுரங்களில் 1,255 மட்டுமே சட்டப்பூர்வமானவை என்று வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.