சுங்கச் சாவடி கொலை வழக்கில் ஒருவர் கைது
தென்கிழக்கு தில்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை தில்லி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
தென்கிழக்கு தில்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை தில்லி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடியைச் சேர்ந்த காசாளர் மன்மோகன் (60), காவலர் மஹிபால் (50) ஆகியோர் தங்கியிருந்த இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, மடிக் கணினிப் பையை எடுத்துக் கொண்டு தப்பியது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அலாகாபாதைச் சேர்ந்த விமல் பாண்டே என்பவர் தில்லியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர்களான தீபக் மற்றும் விஷாலை ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் தேடி வருகிறோம்.
Advertisement
Advertisement
தீபக் மற்றும் விஷால் அதே சுங்கச் சாவடிக்கு அருகில் வசித்து வந்துள்ளனர். தில்லி காவல்துறை பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகி வருவதாக கூறிய அவர்கள், போலி ஆவணங்கள் மூலம் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் இருவர், ராஜஸ்தான் மாநிலத்தில் திருட்டு வழக்கு
ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸார் கூறினர்.
வர்த்தக வாகனங்களுக்கான பசுமை வரி தொடருகிறது
தில்லிக்குள் நுழையும் வர்த்தக வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் இழப்பீட்டு வரி (இசிசி) தொடர்ந்து வசூலிக்கப்பட உள்ளது.
முன்னதாக, இந்த வரிக்கான முன்னோட்ட கால அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியதன் பேரில் இந்த வரி வசூலிப்பு தொடருகிறது.
தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், தில்லிக்குள் நுழையும் வர்த்தக வாகனங்களில் சிறியவைக்கு ரூ.700, பெரியவைக்கு ரூ.1,300 சுற்றுச்சூழல் இழப்பீட்டு வரி விதித்து உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட வாகனங்கள் சுங்கக் கட்டணத்தோடு சேர்த்து செலுத்த வேண்டிய இந்த வரியானது, நவம்பர் 1ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
தெற்கு தில்லி மாநகராட்சியானது, அடுத்த உத்தரவு வரும் வரையில் இந்த சுற்றுச்சூழல் இழப்பீட்டு வரியை வசூலிக்க வேண்டும் என்று கடந்த 26ஆம் தேதி சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, சிறிய மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்
கான சுற்றுச்சூழல் இழப்பீட்டு வரியை இரட்டிப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
காற்றுக் குளிர்விப்பான் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் காற்றுக் குளிர்விப்பானின் (ஏசி) மின்சாரம் பாய்ந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
அயான் என்ற அந்தச் சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் விளையாட்டுப் பொருள் ஒன்று கையில் இருந்து தவறி, காற்றுக் குளிர்விப்பானின் பின்பகுதியில் போய் விழுந்தது.
அதை அயான் எடுக்க முயன்றபோது அவனது கை காற்றுக் குளிர்விப்பானில் பட்டு அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அதைக் கண்ட அவனது பாட்டி அபயக் குரல் எழுப்பினார். வீட்டில் அவனது பெற்றோர் இல்லாததால் அண்டை வீட்டினர் அயானை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கெனவே அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.