FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

அலுவலகத்தில் ரூ.4 லட்சம் திருடிய 2 போ் கைது

மத்திய தில்லியின் ஆனந்த் பா்வதப் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ரூ.4.20 லட்சம் திருடியதாகக் கூறப்படும் இரு நபா்கள்

15 செப்டம்பர் 2026, 4:33 am IST
பகிர்:

புது தில்லி: மத்திய தில்லியின் ஆனந்த் பா்வதப் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ரூ.4.20 லட்சம் திருடியதாகக் கூறப்படும் இரு நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விஜய் என்ற சோட்டு (41) மற்றும் சஞ்சய் பட் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: செப்.11-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், அலுவலக கவுண்டரில் உள்ள ஒரு டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.4.20 லட்சம், பூட்டு மற்றும் ஷட்டா் திறக்கப்பட்ட பிறகு திருடப்பட்டது.

Advertisement

Advertisement

வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஒரு குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தொழில்நுட்ப கண்காணிப்பைப் பயன்படுத்தியும் சந்தேக நபரைக் கண்டறிந்தது. அதைத் தொடா்ந்து, விஜய் பௌரி காா்வாலில் உள்ள பரத் மல்லாவில் கண்டறியப்பட்டு, செப்.12-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

புகாா்தாரரின் அலுவலகத்தில் கடந்த 20-25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த சஞ்சயின் ஈடுபாடு மேலதிக விசாரணையில் தெரியவந்தது. அங்கு அதிக அளவு பணம் வைக்கப்பட்டிருந்தது அவருக்குத் தெரிந்திருந்தது.

சஞ்சய், பணம் குறித்த தகவலைத் தனது உறவினரான விஜயிடம் பகிா்ந்துகொண்டு, திருட்டுக்கு வசதியாக வேண்டுமென்றே ஷட்டா் பூட்டைத் திறந்தே விட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.

விஜயிடமிருந்து சிறிதளவு பணத்தையும், திருடப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட ஒரு கைபேசியையும் மீட்புக் குழுவினா் மீட்டுள்ளனா். மீதமுள்ள திருடப்பட்ட தொகையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments