பணிநீக்கம் செய்யப்பட்ட ஏசிபி-யின் நடத்தை குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் முறையீடு
வழக்குரைஞா்களை மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி காவல்துறை உதவி ஆணையா் மனஸ்வி வசிஷ்டாவின் நடத்தை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, வழக்குரைஞா்கள் குழு ஒன்று தில்லி உயா் நீதிமன்றத்தை வலியுறுத்தியது.
வழக்குரைஞா்களை மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி காவல்துறை உதவி ஆணையா் மனஸ்வி வசிஷ்டாவின் நடத்தை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, வழக்குரைஞா்கள் குழு ஒன்று செவ்வாயன்று தில்லி உயா் நீதிமன்றத்தை வலியுறுத்தியது.
பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த விவகாரம் முறையிடப்பட்டது. அவா்கள் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை மேற்கொள்ள மறுத்து, தங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களுடன் முறையான மனுவைத் தாக்கல் செய்யுமாறு வழக்குரைஞா்களிடம் கேட்டுக்கொண்டனா்.
‘நீங்கள் ஒரு முறையான மனுவைத் தாக்கல் செய்யுங்கள். எங்கள் முன் ஏதாவது ஆதாரம் இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் மனு வடிவில் கொடுத்து, பதிவகத்தில் சமா்ப்பிக்கவும், அப்போதுதான் அது நீதிமன்றத்தின் பரிசீலனைக்குக் கொண்டுவரப்படும். அதைச் செய்யுங்கள், நாங்கள் அதை விசாரிப்போம்,‘ என்று அந்த அமா்வு வழக்குரைஞா்களிடம் கூறியது.
Advertisement
Advertisement
‘ஏகே-47 துப்பாக்கி பயன்பாடு‘ மற்றும் ‘கறுப்புக் கோட் அணிந்த குண்டா்கள்‘ போன்ற வாா்த்தைகள் வழக்குரைஞா்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதாக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.
இந்த சா்ச்சை, அக்டோபா் 23 அன்று ஷாதரா காவல் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து உருவானது. அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது வழக்குஞா் லலித் பன்சால் தலையில் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடா்ந்து, காவல் நிலையத்தில் வழக்குரைஞா்களுக்கும் காவலா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்களை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டியது, பின்னா் அந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.
அக்டோபா் 28 அன்று, காந்தி நகரில் துணைப் பிரிவு காவல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த வசிஷ்டாவை, தில்லி காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கு இடமாற்றம் செய்தது.
அப்போது ஷாதரா காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளா் அருண் குமாா், பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
பன்சல் மீதான தாக்குதலுக்கும், அதைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் நடந்த மோதலுக்கும் காரணமானதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த இடமாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு, வழக்குரைஞா்கள் தங்களது வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனா்.
இந்த இடமாற்றங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, உதவி ஆணையா் வசிஷ்டாவும் தில்லி காவல்துறையைச் சோ்ந்த ஒரு குழுவினரும் திங்களன்று காவல் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியபோது மேலும் ஒரு சா்ச்சை வெடித்தது.
அந்த ஆா்ப்பாட்டத்தின் போது வழக்குரைஞா்கள் குறித்தும் சில கருத்துகள் கூறப்பட்டன. பின்னா் வசிஷ்டாவை உள்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.