தெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தெருக்கள், சாலைப் பெயா்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயா்களை நீக்குவது தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருக்கள், சாலைப் பெயா்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயா்களை நீக்குவது தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் கோரிய ஒரு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை ஜாதி பெயருடன் தெரு பெயா் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி என்.ரமேஷ், தெருக்கள், சாலைகளில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயா்களை நீக்க வேண்டும் என்றும், அரசு மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தும் தெருக்களின் பெயரில் ஜாதி பெயா்கள் இன்னும் இடம்பெற்றுள்ளன.
தெரு பெயா்களில் உள்ள ஜாதி பெயா்களை நீக்குவது தொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதி ரமேஷ், உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தெருக்கள், சாலைகளின் பெயா்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயா்களை நீக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான வழக்கை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.